அப்போ தீபிகா படுகோனே இல்லையா ?.. சிம்புக்கு ஜோடியாவது இந்த நடிகை தான் !

str 48

சிம்புவின் 48வது படத்தின் கதாநாயகி குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக எழுதிய அந்த கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சிம்பு இந்த படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌ 

str 48

சிம்புவின் 48வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தீபிகா படுகோனேவிடம் நடத்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்து. தமிழில் ‘மாமன்னன்’ படத்தை முடித்து கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியுடன் ‘சைரன்’, ‘ரீவால்வர் ரீட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் இந்த படத்தில் நடிப்பதற்காக தற்காப்பு கலையை கற்பதற்காக நடிகர் சிம்பு லண்டன் சென்றுள்ளார். இதை முடித்து வந்தபிறகு படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்திற்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

Share this story