‘கொரோனா குமார்’ பட விவகாரம்: பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை.

photo

கொரோனா குமார் பட விவகாரத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் சிம்பு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

photo

 கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர் நேஷனல்   நிறுவன தயாரிப்பில் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்க ஓப்பந்தனாமார். அதற்காக முன் பணமாக ரூ.1 கோடி பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த படத்தில்  நடிகர் சிம்பு நடித்து முடிக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதற்கு சிம்பு தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

photo

அதில்” 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தான  ஓப்பந்தம் படி கையெழுத்தான நாளில் இருந்து ஓராண்டுக்குல் படப்பிடிப்பை முடிக்கவில்லை என்றால் ரூ.1 கோடி முன்பனத்தை திரும்ப செலுத்த தேவை இல்லை. அதனால் நான் திரும்ப செலுத்த தேவை இல்லை என்மீது தவறில்லை” என தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு ஓத்தி வைத்தார்.

Share this story