காமெடியில் உருவாகும் சிம்புவின் ‘கொரானா குமார்’.. படத்தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு..
கடந்த 2013ம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் ‘கொரானா குமார்’ என்ற பெயரில் உருவாக உள்ளது.

காமெடி ஜானரில் கோகுல் இயக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கவுள்ளார். காமெடி படத்தில் சிம்பு நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது கௌதம் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு பத்து தல உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#VelsFilms Next with @SilambarasanTR_ !
— Vels Film International (@VelsFilmIntl) September 17, 2021
Announcement Coming Tomorrow !
Produced by Dr @IshariKGanesh's @VelsFilmIntl #STR48 pic.twitter.com/7eGIAHjvlm

