சரித்திர படத்தில் யோகிபாபு... யார் இயக்குனர் தெரியுமா ?

yogibabu

சரித்திர படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நகைச்சுவை திரைப்படங்கள் இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் இயக்குனர் சிம்புதேவன். இம்மை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 302-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம், புலி, கசட தபற, விக்டிக் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 

yogibabu

இதில் சிம்பு தேவன் இயக்கிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. வடிவேலு நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு வடிவேலுவை வைத்து மீண்டும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் வடிவேலுவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அப்படம் நிறுத்தப்பட்டது. 

yogibabu

இந்நிலையில் மீண்டும் சரித்திர படம் ஒன்றை சிம்புதேவன் இயக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்கிடையே ‘ஜெயிலர்’, ‘வாரிசு’ உள்ளிட்ட படங்களில் தற்போது யோகிபாபு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story