சிம்புவுக்காக எழுதிய கதையில் வேறு நடிகர் -இயக்குனர் யார் தெரியுமா ?

simbu thug life
அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சிம்புவை வைத்து அடுத்த படத்தினை இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சிம்பு விலகுவதாக தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள அதிரடி ஆக்சன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது.
இருப்பினும், அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, சிம்புவிற்கு பதிலாக இந்த படத்தில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகர் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அந்த நடிகர் யார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சிம்புவுக்காக எழுதிய இந்த கதையை முருகதாஸ் மாற்றி அமைத்து வருகிறாராம்.

Share this story