'சூப்பர் ஸ்டார்' ரிஜெக்ட் செய்த படத்தில் 'சிம்பு' – என்ன படம்? என்ன காரணம் தெரியுமா?

photo

மாநாடு படத்தின் மூலமாக தனது  செகண்ட் இன்னிங்சை தொடங்கிய சிம்பு தற்போது, சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை  உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில்  பிரம்மாண்டமாக நடந்தது. அதில் சிம்புவின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

photo

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைதான் அணுகினார்களாம், ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். காரணம் படத்தின் கதை நன்றாக இருந்தாலும் அது ரீமேக் படம் என்பதால், ஆம்… பத்துதல திரைப்படம் கடந்த 2017அம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ளது.

photo

அதன் பின்னர் தான் இந்த வாய்ப்பு சிம்புவிற்கு சென்றதாக படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பத்துதல திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தகக்து. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

photo

Share this story