‘வாரிசு’ படத்தில் சிம்பு- வெளியான அடடே அப்டேட்!

photo

வாரிசு திரைப்படம் தொடர்ந்து  அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் சிம்பு வாரிசு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

தளபதி விஜய் நடிப்பில் தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் படத்தை  பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார், இவர்களோடு சேர்த்து முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

இந்த நிலையில் வாரிசு படத்திற்கு திரையரங்கம் ஒதுக்குவது, விலங்கு நல வாரிய நோட்டீஸ் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்து படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் வருத்தத்தை தந்தது, இந்த நிலையில் வாரிசு படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் நடிகர் சிம்பு விஜய்க்காக ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சிம்பு பாடும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் நிலையில் விஜய்க்காக சிம்பு பாடவுள்ள பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

photo

Share this story