‘பொன்னியின் செல்வன் 2’ ஆடியோ வெளியீடு – சிறப்பு விருந்தினர் லிஸ்டில் சிம்பு.

photo

இன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழாவில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

பலரும் எதிர்பார்த்து காத்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகவுள்ளது.  இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் மூலமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிலையில் சிறப்பு விருந்தினர் பட்டியலில் மேலும் ஒரு முக்கிய நடிகர் இணைந்துள்ளார். அதாவது சிம்பு கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

photo

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா? என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் கலந்து கொள்வதாக எந்த அறிவிப்போ! தகவலோ! வெளியாகவில்லை.  எனினும் சர்ப்ரைஸ் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story