சிம்பு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு.. இளம் இசையமைப்பாளருக்கு அடித்த ஜாக்பாட்..

sai

பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது. இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. sai

இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது. இந்நிலையில், கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திர புத்திரி' பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். இப்பாடலும் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.sai

சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட சாய் அபயங்கர் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அவர் கூறியதாவது " எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். அவ்வப்போது என் நண்பர்களோடு திரைப்படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மேலும் ஒரு மலையாள திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன். என் பாடலை கேட்டு நடிகர் சிம்பு அழைத்து பாராட்டினார்." என கூறினார். மேலும் சாய் அபியங்கர் சிம்பு நடிக்கும் STR49 மற்றும் STR51 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this story