'நீங்க இல்லாம நான் இல்ல' – தமிழ் மக்களுக்காக வீடியோ வெளியிட்டு அன்பை கொட்டிய 'சிம்பு' .

photo

நடிகர் சிம்புவின் மிரட்டலான நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பத்துதல’. இந்த படத்தில் ஏஜிஆர் எனும் கெத்தான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சிம்பு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்ரி தெரிவித்துள்ளார்.

photo

அந்த வீடியோவில் சிம்பு கூறியதாவது, “ தமிழ் மக்களுக்கு நன்றி படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கு.. பெரிய ஓபனிங் இருக்குனு சொல்றாங்க. ஆனா இதுக்கு எல்லாத்துக்கும் நான் காரணம் கிடையாது. என்னுடைய முந்தைய படம் ஹிட் என்பதால் கிடையாது. நீங்க கொடுத்த ஆதரவு. அதை என்னிக்கும் நான் மறக்கவே மாட்டேன்.இன்னிக்கு இவ்ளோ பெரிய ஆதரவு இருக்குனா அதுக்கு முழு காரணம் நீங்க தான். அதுக்கு நான் எத்தனை தடவ நன்றி சொன்னாலும் பத்தாது ,எனக்கு எப்படினு சொல்ல தெரியல.. நன்றி..  கண்டிப்பா திரையரங்குகளுக்கு வந்து படத்தை பாருங்க. குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் பண்ணுங்க. படம் ரொம்ப நல்லா வந்துருக்கு.‌ கிருஷ்ணா ரொம்ப நல்லா படம் கொடுத்துருக்காரு. ரகுமான் சார் இசையை பற்றி நான் சொல்லவே தேவையில்லை நீங்க எல்லோரும் நல்ல வரவேற்பு கொடுத்துட்டு வரீங்க.. கண்டிப்பா இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமா வரணும்னு  எல்லாம் வல்ல இறைவன வேண்டிக்கொள்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் கண்டிப்பா எங்களுக்கு தேவை" என கூறி வீடியோவை நிறைவு செய்வதற்கு முன் அவரது ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தத்தை பறக்கவிட்டுள்ளார் STR.


 

Share this story