‘மாநாடு’ முதல் நாள் வசூல் இவ்வளவுவா ?... மகிழ்ச்சியில் படக்குழு
சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் மாஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. தமிழ் சினிமாவில் டைம் லூப் திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு சிம்புவின் ஆக்ஷன் அதிரடி வெளியாகியுள்ள இப்படம் சிம்புவின் கம்பேக் படமாக பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரப்பி வழிவதை பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் வசூல் சாதனை படைத்து வரும் இப்படத்தின் ஒரு நாள் கலெக்ஷன் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் இப்படம் 8 கோடியை தாண்டி வசூல் சென்றுக்கொண்டிருக்கிறது. அதேபோன்று தமிழகம் தவிர 3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆக மொத்தம் இந்த படம் ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வரவிருப்பதால் இந்த வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

