சிம்பு பாடிய ‘வாய்ஸ் ஆப் யூனிட்டி’ பாடல் வெளியீடு.. ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்
சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வாய்ஸ் ஆர் யூனிட்டி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. அரசியல் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் சிம்பு பேசும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டைம் லூப் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாய்ஸ் ஆப் யூனிட்டி என்ற லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிவு வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். பட்டையை கிளப்பும் இந்த பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

