அஜித்தை சந்தித்த பிரபல நடிகர் சிம்பு - எதற்கு தெரியுமா ?

ajith
மலேசியாவில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள அஜித் குமாரை பார்க்க நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், நடிப்பை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை தொடர்ந்து கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளை தொடர்ந்து மலேசியாவில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித் குமாரை சிம்பு, இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா ஆகியோர் சந்தித்தனர்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி 12 மணி நேர கார் ரேஸில் பங்கேற்ற அஜித் குமார், தன்னை பார்க்க வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. ஆனால், கார் பந்தயம் நடக்கும் இடத்துக்கு வந்து தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘தயவுசெய்து மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது எனது நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும் கூட. எனவே, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்வோம்’ என்றார்.

Share this story