‘விஜய்’ ஸ்டைலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்திய ‘சிம்பு’.

நடிகர் சிம்புவை காண்வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார் நடிகர் சிம்பு. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக இருந்து பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து இன்று முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார் சிம்பு. ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. இது குறித்து கூட சமீபத்தில் நடந்த ‘பத்துதல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி கண்கலங்கினார். இதனை தொடந்து இன்று தனது வீட்டில் தன்னை சந்திக்க வந்த ரசிகர்மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துகொண்டு, அவர்களுக்கு தளபதி விஜய் ஸ்டைலில் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவரே பரிமாறியுள்ளார்.
பத்துதல திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து சிம்பு அடுத்து வெந்துதணிந்தது காடு 2 மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒருபடம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர் #Atman @SilambarasanTR_ #Silambarasan@teamaimpr pic.twitter.com/APfMEKRr3O
— Kollywood Town (@Kollywoodtown) April 18, 2023