சிம்பு பட நடிகைக்கு நேர்ந்த சோகம் - கதறும் நடிகை
1721739012333
கான்டாக்ட் லென்ஸ் அணிந்ததால் தனது கருவிழி பாதிக்கப்பட்டுள்ளதாக வானம் பட நடிகை ஜாஸ்மின் பாஸின் கவலை தெரிவித்துள்ளார். சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்டோர் ர் நடித்த வானம் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஜாஸ்மின் பாஸின். ஜில் ஜங் ஜக் படத்திலும் நடித்துள்ளார். மேலும், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கான்டாக்ட் லென்ஸ் அணிந்ததால் தனது கருவிழி பாதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
கண்களுக்கு சிகிச்சை பெற்று, கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். உலகமே இருண்டு போனதாக உணர்வதாக தெரிவித்துள்ள நடிகை ஜாஸ்மின் பாஸினுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.