‘பத்து தல’ இசை வெளியீடு எப்போது ?... புதிய அப்டேட்

pathu thala

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். 

pathu thala

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

Share this story