சிம்புவின் பிறந்தநாளில் பிக் சர்ப்ரைஸ் காத்திருக்கு.. ‘பத்து தல’ முக்கிய அறிவிப்பு !

pathu thala

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட் .குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் உருவாகி வருகிறது.. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

pathu thala

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

pathu thala

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர். 

 

Share this story