போடு...ஓடிடியிலும் சரவெடியாய் வெடிக்கப் போகும் ‘பத்து தல’... ரிலீஸ் குறித்த அப்டேட்

pathu thala

 சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல‘ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிம்புவின் மாஸ் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஜில்லுனு காதல்’ படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். 

pathu thala

இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கௌதம் மேனன், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

pathu thala

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கிடையே  இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story