சிம்புவின் ‘பத்து தல’ படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்... எத்தனை கோடிகள் தெரியுமா ?

கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சிம்பு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் கைப்பற்றியுள்ளது. சுமார் 26 கோடிக்கு இந்த உரிமையை அமேசான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.