சிம்பு நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள ‘பத்து தல’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகிறது.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் கெளதம் மேனன், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#PathuThala Sneak Peak is here before you watch the full film??#PathuThalaFromTomorrow
— Studio Green (@StudioGreen2) March 29, 2023
?? https://t.co/Ah5czv0VTy#Atman @SilambarasanTR_ @Gautham_Karthik @StudioGreen2 @PenMovies @arrahman @nameis_krishna @priya_Bshankar @NehaGnanavel @Dhananjayang @moviebuffindia