‘வெந்து தணிந்தது காடு 2’ வருமா ?... மழுப்பிய சிம்பு !

simbu

மீண்டும் கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றுவீரா என்ற கேள்விக்கு சிம்பு பதிலளித்துள்ளார். 

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

simbu

அதில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சிம்புவிடம் மீண்டும் கௌதம் மேனனுடன் இணைந்து ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவருடன் பணியாற்ற முடியுமா என தெரியவில்லை என்று கூறினார். தற்போது நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளேன். அவருடன் சேர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்று கூறினார். 

simbu

மேலும் பேசிய அவர், ‘பத்து தல’ படத்தில் அனைவரின் காபாத்திரமும் அழகாக அமைந்திருக்கிறது. ‘விக்ரம்’ படம் போல் இந்த படத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடியிருக்கிறார். அவருக்கு நன்றி. கவுதம் கார்த்திக் ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். அவரது நடிப்பை ரசித்தேன். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அன்பு காட்டிவிட்டால் நான் அடிமையாகி விடுவேன். இப்போது மனசு ரொம்பவே லேசாக இருக்கிறது. ரகுமான் சாருக்கு நான் தலை வணங்குகிறேன். அமீன் இந்த படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இயக்குனர் கிருஷ்ணாவிற்கு மிகப்பெரிய நன்றி என்று கூறினார். 

 

 

Share this story