'பத்து தல' நம்ம சத்தம் பாடல்... கிளிம்ஸ் வீடியோ வெளியீடு !

சிம்புவின் 'பத்து தல' படத்தின் நம்ம சத்தம் பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மதியம் 12.05 வெளியாகிறது. இதையொட்டி நம்ம சத்தம் பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது பாடலின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.