லப்பர் பந்து படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு.. புகைப்படத்தை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்
1730027729000

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடிவசூலித்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழரசன் இயக்குனர், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
This happened today…With my dear @SilambarasanTR_ .Thanks for the love & your kind words na #STR Love you ❤️🤗#LubberPandhu @tamizh018 @isanjkayy @Prince_Pictures pic.twitter.com/KoOcQujzfB
— Harish Kalyan (@iamharishkalyan) October 25, 2024