‘இது ஏஜிஆரின் வெறியாட்டம்’... மாஸாக ‘பத்து தல’ டிரெய்லர் வெளியீடு !

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘சில்லன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்ில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பத்து தல’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு மிரட்டியுள்ளார். இந்த கதாபாத்திரம் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
#PathuThala action packed mass trailer with an exciting @SilambarasanTR_ pitched against @menongautham . @Gautham_Karthik @arrahman @StudioGreen2 @SonyMusicSouth https://t.co/2XFxVPP9z3 pic.twitter.com/mnNcqWBRdf
— Sreedhar Pillai (@sri50) March 18, 2023