‘பத்து தல’ -ல் மிரட்டியுள்ளரா ஏஜிஆர் .. நெட்டிசன்கள் என்ன சொல்றாங்க ?

pathu thala

 சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகியுள்ளது. 

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இன்று உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். முதல் பகுதியில் ஏஜிஆரின் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதன்பிறகு இடைவெளிக்கு முன்னரே சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்து அசத்துகிறார். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை அசத்தலான உள்ளது. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் வேற லெவலில் உள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. 

 


‘பத்து தல’ முதல் பகுதி மெதுவாக செல்கிறது. கௌதம் மேனன் நடிப்பு நன்றாக இருக்கிறது. சிம்புவை ஓவரா பந்தா பண்ண வைச்சிருக்காங்க. இரண்டாம் பகுதி நன்றாக இருந்தாலும் மிகவும் மெதுவாக கதை நகர்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசைதான் படத்தை காப்பாற்றியுள்ளது. 


  ஒரு அரசியல் செய்தியுடன் இருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம். சிம்புவின் நடனம், வசனம் மற்றும் சண்டைக்காட்சிகள் மூலம் இந்த படத்தை சிறப்பாக்கியுள்ளார். 


சிம்பு சிறப்பாக இந்த படத்தில் களமிறங்கியுள்ளார். இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இசை, திரைக்கதை, ஆக்ஷன் காட்சிகள் வேற ரகம். 


பல இழுபறி காட்சிகள் மற்றும் மோசமான திரைக்கதையால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை. கௌதம் கார்த்திக் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இடைவேளையில் வரும் காட்சிகள் மட்டும் சிறப்பாக இருந்தது. இரண்டாவது பாகம் ஒட்டுமொத்தமாக மோசமாக உள்ளது. 

pathu thala

Share this story