'பத்து தல'... ஏஜிஆரின் வெறித்தமான ஆட்டம்... மிரட்டலான டீசர் வெளியீடு !

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் சிம்புவின் வசனங்கள் அனல் பறக்க உள்ளது. மொத்தத்தில் இந்த படத்தின் டீசர் படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FIRE , MASS and everything CLASS! ?????
— Sony Music South (@SonyMusicSouth) March 3, 2023
#PathuThalaTeaser NOW LIVE ??
?? https://t.co/l8WYouPBrq@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna#PathuThala pic.twitter.com/vqLH2Oy73v