சிம்புவை வேகப்படுத்தும் கமலஹாசன்.. விரைவில் தொடங்கும் ‘STR 48’

str48

கமல் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது. 

‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் மாஸ் ஹிட் கொடுக்க தற்போது சிம்பு தயாராகி வருகிறது. கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது.

str48

இந்த படத்தை‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படம் ‘மன்மதன்’ படம் போன்று உருவாகலாம் என கூறப்படுகிறது. இதற்காக தான் நடிகர் சிம்பு தனது வித்தியாசமாக மாற்றியுள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது. 

str48

முதற்கட்ட பணிகள் நடைபெற்று இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை தேசிங்கு பெரியசாமி செய்து வருகிறார். இந்த படத்தை திட்டமிட்டபடி முடிக்க வைக்க கமலும், சிம்புவை வேகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story