விராட் கோலி பயோ பிக் படத்தில் நடிக்கிறாரா நடிகர் சிம்பு...?

simbu

விராட் கோலி பயோ பிக் படத்தில்  சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. சமீபத்தில் ஒரு வீடியோவில், சிம்புவின் 'பத்து தல' படத்தில் இடம் பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை மீண்டும், மீண்டும் கேட்பதாக கூறினார். பதிலுக்கு எஸ்டிஆரும் 'நீங்களும் சிங்கம்தான்' என அவரை வாழ்த்தினார். சமீபகாலமாக விராட் கோலி மாதிரியே வித்தியாசமான ஹேர் ஸ்டைல், தாடியுடன் காணப்படுகிறார் சிம்பு. அதனால், விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடிக்கப் போகிறார் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. விராட் கோலியாக நடிக்க சிம்பு மனதளவில் தயார் ஆகிவிட்டாராம்.simbu

விராட் கோலி தரப்பு மனசு வைத்தால் அந்த படம், பான் இந்தியா படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்தவர் விராட் கோலி. அவர் வாழ்க்கை சினிமாவானால் அனுஷ்கா சர்மாவாக திரிஷா நடிக்க வேண்டும் என இப்போதே ரசிகர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். 
 

Share this story