நடிகர் சிம்பு வெளியிட்ட 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...!
1732717546000
'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக முன்பு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை வெளியாகாத நிலையில், ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
Wishing my dear brother @thisisysr on his next production through @YSRfilms titled #Sweetheart. A new-age romance drama starring the young and energetic @rio_raj and @gopikaramesh_
— Silambarasan TR (@SilambarasanTR_) November 27, 2024
A Film by @SwineethSukumar
A @thisisysr Musical#Yuvan183 #SweetHeartFirstLook @YSRfilms… pic.twitter.com/Tm1VZ0TL7M