சிம்புவுடன் வெற்றிமாறன் இணையும் படம் -ஷூட்டிங் எப்போது தெரியுமா ?

simbu

இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கிய வட சென்னை படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது அவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள் கடந்த மாதம் படமாக்கப்பட்டன. சிம்பு லுங்கி அணிந்தபடி அந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலானது.
சிம்பு வடசென்னை கெட்டப்பில் இருந்ததால் இது வடசென்னை இரண்டாம் பாகமா என்கிற கேள்வியும் எழுந்தது. அதன் பின்னர் விளக்கம் அளித்த வெற்றிமாறன், இது வடசென்னை இரண்டாம் பாகம் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். இருப்பினும் இந்தக் கதை வட சென்னை யுனிவர்சில் வருவதாகவும் அவர் கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்கும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஷூட்டிங் தற்போது வரை தொடங்கப்படாததால் படத்திற்கு என்ன ஆனது என கேள்வி எழுந்தது.
தற்போது அப்படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதால் ஷுட்டிங் தாமதமாகி உள்ளதாகவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது .

Share this story