கமல் படத்திற்காக இரவு, பகலாக உழைக்கும் சிம்பு

கமல் படத்திற்காக  இரவு, பகலாக உழைக்கும் சிம்பு

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது.  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌ 

கமல் படத்திற்காக  இரவு, பகலாக உழைக்கும் சிம்பு

இந்நிலையில், படப்பிடிப்புக்காக நடிகர் சிம்பு துபாயில் தன்னை தயார்படுத்தி வருவதாகவும், இம்மாத இறுதியில்தான் சிம்பு சென்னை வருவார் என்றும் பிப்ரவரியில் படப்பிடிப்பை தொடங்கி விடுவார் என்றும் தெரிகிறது.

Share this story