20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ- ரிலீஸ் ஆகும் சிம்புவின் 'மன்மதன்' திரைப்படம்

simbu

2004 ஆம் ஆண்டு 6ஏ. ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.simbu

இவர்களுடன் கவுண்டமனி, சிந்து, துல் குல்கர்னி, சந்தானம், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படம் மீண்டும் நாளை {ஜனவரி 31} வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாமகமடைந்துள்ளனர். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படமும் நாளை மீண்டும் வெளியாகவுள்ளது. சிம்பு தற்பொழுது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படத்தில், தக் லைஃப் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Share this story