சிம்புவின் "STR49" படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..!

str

சிம்புவின் "STR49" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

நடிகர் சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் SRT49 என அழைக்கப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சந்தானம் இப்படம் மூலம் மீண்டும் சிம்பு உடன் இணைகிறார்.

str
இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது.இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது. அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 


 

Share this story