சிம்ரனின் 50வது தமிழ் திரைப்படம் –ஹாரர் திரில்லரான ‘சப்தம்’ படத்தில் இணைந்தார்.

photo

90களில் இளவட்டங்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது முதல் படமான பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்த  ‘விஐபி’ திரைப்படம் 100 நாட்கள் தியரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். அதிலும் சிம்ரனின் நடனத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழில் தனது 50வது படமாக சப்தம் படத்தில் இணைந்துள்ளார்.

ஆல்ஃபா ப்ரேம்ஸ் மற்றும் 7ஜி பிலிம்ஸ்  இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம்  ‘சப்தம்’. இந்த படத்தில் நடிகை லெட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில், நடிகை லைலாவும் இணைதுள்ளார். தற்போது சிம்ரனும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த படம் சிம்ரனின் 50வது தமிழ் திரைப்படமாகும்.

2009ஆம் ஆண்டு வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த ‘ஈரம்’ கூட்டணிதான் சப்தம் படத்தையும் தயாரிக்கின்றனர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

Share this story