ரஜினி ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து கூறிய சிங்கப்பூர் போலீஸ்...

singapore police

 சிங்கப்பூர் காவல்துறையினர் ரஜினி ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் தயாராகி வருகின்றனர்.இதையொட்டி,  தமிழ் சினிமாவை பொறுத்த வரை நாளை 4 படங்கள் வெளியாக உள்ளன. சிவகார்த்திகேயனின் 'அமரன்', ஜெயம் ரவியின் 'பிரதர்', துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்', கவினின் 'பிளடி பெக்கர்' ஆகிய நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகிறது.

null



இந்நிலையில்,  சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் பின்னணி இசையுடன் சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், ரஜினியின் ஹுக்கும் வசனமும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தமிழ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Share this story