யோகி பாபு நடிப்பில் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட சிங்காரம் -பட விமர்சனம்

yogi babu

நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பாசிமணி, ஊசி வியாபாரி சிங்காரம் என்கிற யோகி பாபு, தனது சமூக மக்களின் இருப்பிடம், அடையாள ஆவணங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காத நிலையில், அதற்காக நீதி கேட்டு போராடுகிறார். அவருக்கு ஊர் பெரிய மனிதர் வேல.ராமமூர்த்தி உதவுகிறார். அதை எம்எல்ஏ மாரிமுத்து மற்றும் படவா கோபி, சென்ராயன் கோஷ்டி தடுத்து பிரச்னை செய்கிறது.
இந்நிலையில், அவமானம் தாங்க முடியாமல் யோகி பாபுவின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் தூக்கில் தொங்குகிறார். அப்போது அவர் வாங்கியிருந்த அரசு லாட்டரியில் ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. அதை வைத்து தேர்தலில் போட்டியிடும் யோகி பாபுவின் நிலை என்ன ஆனது என்பது மீதி கதை. புதுச்சேரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, நரிக்குறவர் இன மக்களின் வாழ்க்கை போராட்டத்தை யதார்த்தமாகவும், சிந்திக்கும் வகையிலும் சொல்லியிருக்கிறது படம்.
சமூக அக்கறையுடன் எழுதி இயக்கிய கே.வி.கதிர்வேலு பாராட்டுக்குரியவர். வழக்கமான காமெடியுடன் கூடிய குணச்சித்திர கேரக்டரில், முழு படத்தையும் தாங்கி நிற்கும் யோகி பாபு சிறப்பாக நடித்துள்ளார்

Share this story