இளம் பாடகர் அபினவ் சிங் தற்கொலை?

abinav singh

ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

abinav singh

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Share this story