விஜய் மில்டன் இயக்கத்தில் பாடகர் பால்டப்பா...?
1747650703526

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் பாடகர் பால்டப்பா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பிரபலமான மேடை பாடகர், பாடலாசிரியர் அனிஷ். இவரின் செல்லப்பெயர் பால்டப்பா. ஆவேசம் படத்தில் இவர் பாடல் பிரபலமானது. ஜெயம் ரவி நடித்த ‛பிரதர்' படத்தில் மக்கா மிஷி பாடலை எழுதியவரும் அவர்தான். இப்போது அவர் நடிகர் ஆகிவிட்டார். கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டனின் அடுத்த படத்தில் பால்டப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருணும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகிறார். கோலி சோடா கதையின் தொடர்ச்சியாக இந்த கதை உருவாக உள்ளதாக கூறப்ப்படுகிறது.