பிப்ரவரி 8ல் பிரபல பாடகி சின்னக்குயில் சித்ராவின் இசை நிகழ்ச்சி!

பிரபல பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
பிரபல பாடகர்களும் இசை அமைப்பாளர்களும் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி சித்ராவைக் கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
‘கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.8-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதை இ- லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் இணைந்து வழங்குகிறது. இதற்கான நுழைவுச் சீட்டுகள், இன்ஸைடர்.இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும்.
இதுபற்றி பாடகி சித்ரா கூறும்போது, “இதுவரை பல இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன். இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளனர். இதில், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ரூபா ரேவதி ஆகியோர் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பிரபலமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாட இருக்கிறோம்” என்றார்.