பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி..!
1723965050000
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அதேநேரம், சாதாரண வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சையின் மூலம் வயிற்று வலியை குணப்படுத்தி விடலாம் என மருத்துவர் வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.