பாடகி சைந்தவியின் செயலால் குவியும் பாராட்டு..! என்ன செய்தார் தெரியுமா...?
ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சி தொடர்பாக பாடகி சைந்தவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இருவரும் இணைந்து தெறி படத்தில் ’என் ஜீவன்’, அசுரன் படத்தில் ’எள்ளு வய பூக்களையே’ என பல ஹிட் பாடல்களை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரவியது. அப்போது பாடகி சைந்தவி வெளியிட்ட அறிக்கையில், “எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரது கேரக்டரை பற்றி தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
எங்களின் பிரிவு பற்றி பரவும் வதந்திகள் வருத்தம் அளிக்கிறது. நானும் ஜிவி பிரகாஷும் பள்ளிப் பருவம் முதல் நண்பர்களாக இருந்துள்ளோம், நாங்கள் 24 ஆண்டு கால நண்பர்கள். அதே நட்புடன் இனி பயணிப்போம்” என கூறினார். இந்நிலையில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் ஜிவி பிரகாஷ் நடத்தும் இசை நிகழ்ச்சி (Live in concert) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக பாடகி சைந்தவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் தான் பாடவுள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, சைந்தவியின் செயல் பாராட்டை பெற்று வருகிறது. விவாகரத்து ஆன பின்னும் நட்பாக இருப்பது அவர்களது முதிர்ச்சியை காட்டுவதாக சமூக வலைதளத்தில் பலர் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’அமரன்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், சைந்தவி ’கனவே’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.