பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கம் ஹேக் எனத் தகவல்

shreya goshal

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல்வேறு தேசிய விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில், அவரது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ..  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹலோ நண்பர்களே, எனது எக்ஸ் கணக்கு பிப்ரவரி 13 முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் குழுவைத் தொடர்பு கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன்.

ஆனால் ஒரு சில தானாக உருவாக்கப்பட்ட பதில்களைத் தவிர வேறு எந்த பதிலும் கிடைக்கவில்லை. என்னால் இனி உள்நுழைய முடியாததால் எனது கணக்கை நீக்கக்கூட முடியவில்லை.தயவுசெய்து எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் அல்லது அந்தக் கணக்கிலிருந்து எழுதப்பட்ட எந்த செய்தியையும் நம்பாதீர்கள். அவை அனைத்தும் ஸ்பேம்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார். 

Share this story