மிர்ச்சி சிவாவின் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’... சிரிப்பே வராத ஸ்னீக் பீக் !

Single Shankarum Smartphone Simranum

 சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

அகில உலக ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் மாகபா ஆனந்த், பாடகர் மனோ, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Single Shankarum Smartphone Simranum

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் இப்படத்திற்கு  லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

Single Shankarum Smartphone Simranum

இந்த படம் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாகியுள்ள இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.   

Share this story