சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’... மிர்ச்சி சிவாவின் பட டிரெய்லர் !

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அகில உலக ஸ்டார் மிர்ச்சி சிவா மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’. முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
லார்க் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபோனும், அதனால் நடக்கும் களேபரங்களும் தான் இந்த படத்தின் கதை. மொத்தத்தில் இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் மாகபா ஆனந்த், பாடகர் மனோ, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.