சைரன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு?

சைரன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜெயம் ரவி. பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கும் ஜெயம் ரவியின், பொன்னியின் செல்வன் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக “சைரன்” எனும் பிரமாண்ட படத்தில் நடிக்க இருக்கிறார்.  இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்துப் பணியில் பங்காற்றிய ஆண்டனி பாக்யராஜ்,   இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த ஆக்சன் திரில்லர் படமாக சைரன்  உருவாகிறது.  இந்தப்படத்தில்  இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுமையான  கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி  நடிக்கிறார்.  சைரன் படத்தில்  நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

சைரன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு?

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சைரன் படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிப்போகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Share this story