சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது
1726323352000
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் அடுத்த பாடலான `படிச்சிக்கிறோம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பத்ம பிரியா மற்றும் பிரார்தனா ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலிற்கு விவேகா வரிகளை எழுதியுள்ளார். திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.