உருவாகிறது 'சிவா மனசுல சக்தி' பார்ட் 2.. இயக்குனர் ராஜேஷ் கொடுத்த அப்டேட்
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]. ஹீரோயினாக நடித்த அனுயா, தாயாக நடித்த ஊர்வசி என அனைவரும் கதாபாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்திய இப்படம் எதார்த்தமான கதைக்களத்துடன் ஃபீல் குட் படமாக அமைத்திருந்தது. ஜீவா - சந்தானம் காம்பினேஷனில் காமெடி டிராக்கையும் இயக்குனர் ராஜேஷ் வொர்க்அவுட் செய்திருப்பார். இதனைத்தொடர்ந்து 2010 இல் ஆர்யா- சந்தானம் காம்போவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை அதே பாணியில் எடுத்து ஹிட் கொடுத்தார்
ராஜேஷ். தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ராஜேஷ் பிசியாக இயங்கி வருகிறார். இந்த சூழலில் சிவா 'மனசுல சக்தி 2' படத்தை எடுக்கும் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் இயக்குனர் ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். SMS 2 படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், நடிகர் ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருப்பதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளது SMS ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.