உருவாகிறது ஜீவாவின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. இயக்குனர் கொடுத்த செம்ம அப்டேட் !
ஜீவாவின் சூப்பர் ஹிட் படமான ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காமெடி மற்றும் காதல் படங்கள் எடுத்து பிரபலமான இயக்குனர் ராஜேஷ், இயக்குனராக அறிமுகமான படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த படத்தில் நடிகர் ஜீவாவும், சந்தானமும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகை அனுசுயா, ஊர்வசி, பேராசிரியல் ஞானசம்பந்தம், ஷகீலா உள்ளிட்டோர் நடித்திருந்தார். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஹீரோ, ஹீரோயின் இடையேயான முட்டல், மோதல், காதல் என கலகலப்பாகவே செல்லும் கதைக்களம். இந்த படத்தில் ஜீவாவுடன் சந்தானம் செய்யும் அலப்பறை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படி படம் முழுக்க காதல் மற்றும் காமெடி கலந்து கொடுத்து ரசிகர்களை மிகவும் இயக்குனர் ராஜேஷ்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குனர் ராஜேஷ் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி சமீபத்தில் பேசிய அவர், விரைவில் ஜீவாவுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளேன். அது சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.