செல்போனை வைத்து காமெடி ஜானரில் நடித்துள்ள சிவா... ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ டீசர் வெளியீடு

SingleShankarumSmartphoneSimranum

செல்போனை வைத்து காமெடி ஜானரில் உருவாகியுள்ள ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் காமெடி கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மிர்ச்சி சிவா. ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’. லார்க் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

siva

இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் மாகபா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

siva

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு செல்போனை வைத்து முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story