சிவா நடிக்கும் 'சுமோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sumo
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. 


 

null


 

Share this story